முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

22 Mar 2026, 3:06 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

பாஜக ஆட்சியில், பணச் சக்கரங்களைப் பொருத்தாமல் எந்தவொரு கோப்பும் நகர்வதில்லை. தற்போது கேமராவிற்கு முன்னாலேயே சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. நாள்தோறும் பாஜக ஆளும் மாநிலங்களின் லஞ்ச வீடியோ வெளியாகி வருகிறது. இதற்கெல்லாம் சண்டிகரில் நடந்த பாஜகவின் ‘மகா ஊழல்’ (சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு) தான் ஒரு உந்துதலாக இருக்கிறது.

பத்திரிகையாளர் நரேந்திர நாத்

மேற்குவங்கத் தேர்தலில், நவராத்திரி திருவிழாவிற்கு நடுவே பாஜக தலைவர்கள் கையில் மீனை ஏந்திக்கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள். இது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் இதை ஏதேனும் பாஜக அல்லாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர் செய்திருந்தால், ஊடகங்களில் எத்தனை விவாதங்கள் நடந்திருக்கும்?

தில்லி ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ்

சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக தில்லி காவல்துறை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. எங்கள் ஆட்சி இரட்டை இஞ்சின் வேகத்தில் என்று பாஜகவினர் கூறுவது மக்கள் நலன் சார்ந்த பணி தொடர்பானது அல்ல. அந்த வேகம் சட்டவிரோத மது விற்பனைக்கே பயன்படுத்தப்படுகிறது.

யுவ தேசம் சமூக ஊடகம்

மேற்கு ஆசியப் போரால் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உள்ளது. ஆனால் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களோ, மோடியை யார் மிமிக்ரி செய்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் தேடிக்  கொண்டு இருக்கிறார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram