தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தும் முன்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் வலியுறுத்தல்

5 Apr 2026, 3:36 pm
மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தும் முன்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் வலியுறுத்தல்
<p><strong>மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தும் முன்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் வலியுறுத்தல்</strong></p> <p>லக்னோ நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தும் முன்பாக, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிக்கப்பட வேண்டும் என &lsquo;இந்தியா&rsquo; கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகி லேஷ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறு கையில்,&ldquo;எந்தவொரு கொள்கையும் துல்லியமான தரவுகளின் அடிப்படை யில் இருக்க வேண்டும். காலாவதி யான தரவுகளைப் பயன்படுத்துவது தவறான அடித்தளம் ஆகும். மகளிர் இடஒதுக்கீட்டின் அடிப் படை என்பது மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு என்பதாகும். இது எண்களைச் சார்ந்த ஒரு கணிதப் பிரச்சனை. அந்த எண்கள் மக்கள் தொகை தரவுகளிலிருந்து பெறப்பட வேண்டும். 2011ஆம் ஆண்டின் தரவு களைப் பயன்படுத்தினால் இட ஒதுக்கீட்டின் அடித்தளமே தவறாகி விடும். அடித்தளமே தவறாக இருக்கும்போது, சரியான முடிவை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெண்களை &lsquo;திசைதிருப்ப&rsquo; முயற்சிக்கின்றனர். இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் முன் புதிய கணக் கெடுப்பை நடத்த வேண்டும்&rdquo; என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.