பட்டியலினத்தவர், பழங்குடிகளுக்கு 100 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாதி திட்டம்
5 Jul 2026, 8:56 pm
<p><strong>பட்டியலினத்தவர், பழங்குடிகளுக்கு 100 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாதி திட்டம்</strong></p><p>வருகிற 2027 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சி பட்டி யலினத்தவர், பழங்குடிகளுக்கு 100 தொகுதிகளை ஒதுக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அக்கட்சி அறி விப்பில்,“சமாஜ்வாதி கட்சி தனது ‘பி.டி.ஏ’ (PDA - பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர்) கூட்டணியை பலப் படுத்த புதிய அரசியல் உத்தியைக் கை யாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதி யாக, பட்டியலினத்தவர், பழங்குடி சமூ கத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சுமார் 100 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட 84 இடங்கள் மற்றும் பழங்குடியினருக்கான 2 இடங்கள் தவிர, 14 பொதுத் தொகுதிகளிலும் தலித் சமூ கத்தைச் சேர்ந்த வலுவான வேட்பா ளர்களைக் களம் இறக்க முடிவு செய்துள் ளோம்” என அகிலேஷ் யாதவ் தலைமை யிலான சமாஜ்வாதி கட்சிகூறியுள்ளது.</p>
