முந்தய பக்கம்

தியாகி கே.ரத்தினசாமிக்கு வீரவணக்கம்!

13 Mar 2026, 4:52 pm
தியாகி கே.ரத்தினசாமிக்கு வீரவணக்கம்!
<p><strong>தியாகி கே.ரத்தினசாமிக்கு வீரவணக்கம்!</strong></p> <p>திருப்பூர், மார்ச் 13- இடுவாய் தியாகி கே.ரத்தினசாமியின் 24 ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், இடுவாய் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்று, அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், செங்கொடி ஏற்றி வைத்தார். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.கணேசன் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கட்சி அணியினர், இடுவாய் கிராம பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். &nbsp;இதைத்தொடர்ந்து இடுவாய் மைதானத்தில், தியாகி ரத்தினசாமி நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram