பாஜக எம்.பி.யின் மகளுக்கு நடிகர் சல்மான் கான் எச்சரிக்கை
27 Sept 2026, 9:56 pm
<p><strong>பாஜக எம்.பி.யின் மகளுக்கு நடிகர் சல்மான் கான் எச்சரிக்கை</strong></p><p>பாலிவுட் முன்னாள் நடிகரும், பாஜக எம்.பி.யுமான மனோஜ் திவாரியின் மகள் ரிதி திவாரி, இந்தியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் களமிறங்கியுள்ளார்.இந்நிகழ்ச்சியில், உதிதி சிங் என்ற சக போட்டியாளருக்கு எதிராக ரிதி திவாரி வரம்புமீறித் தரக்குறைவான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், ரிதி திவாரியின் செயலால் ஆவேசமடைந்த தொகுப்பாளரும், பாலிவுட் நடிகருமான சல்மான் கான், மேடையில் ரிதி திவாரியைச் சரமாரியாகச் சாடினார். அப் போது சல்மான் கான்,”பெரிய இசை நட் சத்திரமாக வர வேண்டும் என்ற கனவோடு இங்கு வந்த நீங்கள், இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்திய தரம் தாழ்ந்தவார்த்தைகள் உங்களை மட்டுமல்லாமல் உங்களது தந்தையின் பெயரையும் சீரழித்துவிடும். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு உங்களை யாருக்கும் தெரியாது; நீங்கள் அரசியல் பிரபலத்தின் வாரிசு என்பதால் மட்டுமே இங்கு வந்தீர் கள் என்று மக்கள் பேசுகிறார்கள். அதனால் உங்களை நான் கண்டிக்க மாட்டேன் என்றும் நினைக்கிறார்கள்; இதைத் தட்டிக் கேட்க வேண்டுமா அல்லது புரிய வைக்க வேண்டுமா?” எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.</p>
