தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேலம் மண்டல ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் நலச்சங்கம் துவக்கம்!

9 Jan 2026, 3:41 pm
சேலம் மண்டல ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் நலச்சங்கம் துவக்கம்!
<p><strong>சேலம் மண்டல ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் நலச்சங்கம் துவக்கம்!</strong></p> <p>சேலம், ஜன.9- சேலம் மண்டல ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் நலச்சங் கம் வெள்ளியன்று துவங்கப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். சேலம் வி.பி.சிந்தன் நினைவ கத்தில், மண்டல ஓய்வுபெற்ற போக் குவரத்து ஊழியர் நலச்சங்க துவக்க விழா வெள்ளியன்று நடை பெற்றது. சிஐடியு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க மண்டலத் தலைவர் கே.செம்பன் தலைமை வகித்தார். முன்னதாக, மெய்ய னூர் போக்குவரத்து பணிமனை முன்புள்ள வெண்மணி நினைவுத் தூணிற்கு அஞ்சலி செலுத்தப் பட்டு, அங்கிருந்து வி.பி.சிந்தன் நினைவகம் வரை பேரணி நடை பெற்றது. மூத்த தலைவர் எஸ்.பழனி கவுண்டர் கொடியேற்றி வைத்தார். ரேவா மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஜே.கலைச்செல் வன் வரவேற்றார். இந்நிகழ்ச்சி யில், 62 நாட்கள் தொடர்ந்து நடை பெற்ற போக்குவரத்து தொழிலா ளர்கள் போராட்டத்தில் பங்கேற்ற வர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது. இந்நிகழ்வில், மின்சார பேருந் துகளை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். விழாக்காலங்களில் தனி யார் பேருந்தை சிறப்பு இயக்கத் திற்கு பயன்படுத்த தடை செய்ய வேண்டும். தனியார் மையத்தை ஊக்குவிக்கக்கூடாது. அரசு ஊழி யர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்று &nbsp;அனைத்து பணப்பலன்களும் வழங் குவதைப்போல, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலே பணப்பலன்களை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் சம்ப ளத்தில் பிடித்தம் செய்யும் பிஎப் தொகையை, அந்தந்த மாதம் வங்கி &nbsp;கணக்கில் செலுத்த வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழி லாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு &nbsp;திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ். கே.தியாகராஜன் நிறைவுரையாற் றினார். &nbsp;இதைத்தொடர்ந்து, சங்கத்தின் கெளரவத் தலைவராக எஸ்.கே. தியாகராஜன், தலைவராக வி.தங்க வேல், பொதுச்செயலாளராக ஜே. கலைச்செல்வன், பொருளாளராக எம்.செல்வமோகன், துணைத் தலைவர்களாக பி.முருகேசன், எம். பழனி கவுண்டர், வி.ரங்கசாமி, எஸ். அழகேசன், பி.பழனிசாமி, துணை &nbsp;பொதுச்செயலாளர்களாக பி.வரத ராஜ், கே.தங்கராஜ், கே.எஸ்.போஜ கான் உட்பட 35 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. கூட் டுறவு சங்க மாவட்டத் தலைவர் எல்.கே.மனோகரன், விரைவு போக் குவரத்து சங்க மாநில ஒருங்கி ணைப்புக்குழு உறுப்பினர் டி.மணி முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல பொதுச்செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.