முந்தய பக்கம்

புத்தக தினம், குழந்தைகள் கோடை கொண்டாட்டம் துவக்கம்

12 May 2026, 1:10 am
புத்தக தினம், குழந்தைகள் கோடை கொண்டாட்டம் துவக்கம்
<p><strong>புத்தக தினம், குழந்தைகள் கோடை கொண்டாட்டம் துவக்கம்</strong></p><p>சேலம், மே 11- சேலம் மாவட்ட மைய நூலக குழந்தைகள் நூலக கட்டிடத்தில், உலக புத்தக தினம் மற்றும் குழந்தைகள் கோடை கொண்டாட்டம் என்ற ஏழு நாள் தொடர் நிகழ்ச்சி திங்களன்று துவங்கி யது. தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறை சேலம் மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் மற்றும் தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் இணைந்து நடத்தும் “உலக புத்தக தினம் மற்றும் குழந்தை கள் கோடை கொண்டாட்டம்” என்ற ஏழு நாள் தொடர் நிகழ்ச்சியின் முதல் நாள் விழா, திங்களன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட மைய நூலக குழந்தை கள் நூலக கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலு வலர் அர. கோகிலவாணி தலைமை வகித்தார். அறிவியல் இயக்க கிளைத் தலைவர் தீனதயாளன் வரவேற்றார். அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பின்னர் கருத்தாளர் பாண்டியன், ஓரிகாமி காகித மடிப்பு கலை பயிற்சி அளித்தார். இதில் தொப்பி, விசிறி, சமாதான கொக்கு உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் செய்து காட்டப்பட்டன. மாவட்டம் முழுவதிலிருந்தும் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். முதல் நிலை நூலகர் சித்ராபூர்ணம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர்கள் சுரேஷ், செங் கோட்டுவேல், பொருளாளர் செங்கோ டன், மாவட்ட இணைச்செயலாளர் காட் வின், நூலகர்கள் மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram