தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேலத்தில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு மாதர் சங்கம் வலியுறுத்தல்!

13 Jun 2026, 11:04 pm
சேலத்தில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு மாதர் சங்கம் வலியுறுத்தல்!

சேலத்தில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு மாதர் சங்கம் வலியுறுத்தல்!

சென்னை, ஜூன் 13 - சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஆபாச வீடி யோக்கள் மூலம் மிரட்டி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கிய சம்ப வத்தில், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, மாநிலப் பொதுச் செயலாளர் அ. ராதிகா ஆகியோர் தங்க ளின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிர்ச்சியை ஏற்படுத்தும் குற்றச் சம்பவம்

சேலம் மாவட்டத்தில் 50-க்கும் மேற் பட்ட இளம்பெண்களை ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங் களை பயன்படுத்தி மிரட்டி, பாலியல் ரீதி யாக வன்கொடுமை செய்த சம்பவம் வெளியாகி தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மணி கண்டன் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொடூ ரச் செயலில் இன்னும் ஒரு சிலர் இருக்க கூடும் என்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் வலுவாக உள்ளது. எனவே

தீவிர விசாரணை நடத்திட வேண்டும். ஆட்சியாளர்கள் மவுனம் காக்கக் கூடாது

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்தவர் என்ற தகவல்கள் ஊட கங்களிலும், சமூக வலைத்தளங்களி லும் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவ டிக்கை எடுப்பதுடன், கட்சியின் சார்பி லும் உடனடி மற்றும் வெளிப்படையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த அரசு மற்றும் ஆளும் கட்சி, இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து மவுனம் காக்கக் கூடாது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்மு றைகள், இணையவழி பாலியல் குற்றங் கள், ஆபாசப் படங்கள் மூலம் மிரட்டல், குடும்ப வன்முறைகள், சாதி ஆணவ படுகொலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்து மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் களுக்கு சட்ட மற்றும் உளவியல் உதவி களை வழங்க வேண்டும். இணையவழி பாலியல் குற்றங்களுக்கு எதிராக சிறப்பு கண்காணிப்புகளை உரு வாக்க வேண்டும். பெண்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உரிய வழி காட்டுதல்களை வழங்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் விரைந்து விசாரணை நடத்தி கடுமை யான தண்டனை வழங்க சிபிசிஐடி விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.