தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முன்னுரிமை சேலம் மேற்கு தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் உறுதி

3 Apr 2026, 6:05 pm
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முன்னுரிமை சேலம் மேற்கு தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் உறுதி
<p><strong>அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முன்னுரிமை சேலம் மேற்கு தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் உறுதி</strong></p> <p>சேலம், ஏப்.3- அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிப்பேன் என என சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜின் தேர்தல் பணிமனை அலுவலகத் திறந்து வைத்து உரையாற்றினார். சேலம், ஐந்து ரோடு பகுதியில் தேர்தல் பணிமனை அலுவலக திறப்புவிழா வெள்ளியன்று நடைபெற்றது. புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோகன்ராஜ் தெரிவித்ததாவது, &rdquo;சேலம் மேற்கு தொகுதியில் ஐந்து முனைப் போட்டி நிலவுவதாக சொல்லப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரை எனக்குப் போட்டியாக இங்கு எவருமே கிடையாது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் எவரையும் காணவில்லை. எனது வெற்றி என்பது மக்களால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுவிட்டது.&rdquo; அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமகவின் சின்னம் மாம்பழம். அதில் ஏற்கனவே ஒரு பழம் (அதிமுக) உடைந்துவிட்டது, இன்னொரு பழம் (பாமக) அழுகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களை நான் எப்படிப் போட்டியாளர்களாக கருத முடியும். &rdquo;மேற்கு தொகுதியில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நான் நன்கு அறிவேன். ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். தமிழக அரசின் சிறப்பான திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்கிறேன். மக்களின் குறைகளை முழுமையாக ஆராய்ந்து, வெற்றிக்குப் பிறகு பொறுப்புள்ள அமைச்சர் தலைமையில் உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு, தேவையான அனைத்துத் திட்டங்களையும் இத்தொகுதிக்கு கொண்டு வரக் கடுமையாக பாடுபடுவேன்,&rdquo; என்று உறுதியளித்தார். இவ்விழாவில், தேர்தல் அலுவலகத்தை திமுக பொருளாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.ராமமூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சாரதா தேவி, தேமுதிக மாநகர் மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கனகராஜ், என்.பிரவீன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.