தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேலத்திலிருந்து தில்லிக்கு விரைவில் விமான சேவை!

13 Jul 2026, 12:23 am
சேலத்திலிருந்து தில்லிக்கு விரைவில் விமான சேவை!
<p><strong>சேலத்திலிருந்து தில்லிக்கு விரைவில் விமான சேவை!</strong></p><p>சேலம், ஜூலை 12- சேலத்திலிருந்து தில்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவில் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய இயக்குநர் நவ்ஷாத் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் சேலம் விமான நிலை யம் உள்ளது. இங்கிருந்து தற்போது சென்னை, கொச்சி, பெங்களூரூ, ஐதரா பாத் ஆகிய நகரங்களுக்கு விமானங் கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையை சேலம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்ட மக்கள் பயன்ப டுத்தி வருகின்றனர். அதேசமயம், சேலம் விமான நிலையத்தை விரிவாக் கம் செய்து, இரவு நேர விமான சேவை மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்க ளுக்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந் நிலையில், மேட்டூரை சேர்ந்த சமூக ஆர் வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 4 கேள்விகளை கேட்டு சேலம் விமான நிலைய இயக்குநர் நவ்ஷாத் திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், சேலத்திலிருந்து சென்னைக்கு தினமும் காலை மற்றும் மாலையில் விமானம் இயக்க வேண்டும். அதே போல், சேலத்திலிருந்து மும்பை, தில்லி, கொல்கத்தா ஆகிய நகரங்க ளுக்கு புதிய நேரடி விமான சேவை களை அறிமுகப்படுத்துதல், விமான நிலைய முனைய விரிவாக்கம், பயணி கள் வசதிகள் மற்றும் செயல்பாட்டு வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், இரவு நேர தரையிறக்க வசதிகளை செய்தல் போன்ற கேள்வி கள் கேட்கப்பட்டிருந்தன. இதற்கு விமான நிலைய இயக்கு நர் நவ்ஷாத் அளித்த பதிலில், சேலத்தி லிருந்து சென்னைக்கு தினமும் கூடுதல் விமானங்களை இயக்குமாறு சம்பந்தப் பட்ட விமான நிறுவனங்களை கேட்டு கொண்டுள்ளோம். சேலம் விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின் றன. இந்த பணிகள் முடிந்த பிறகு சேலத்தில் இருந்து தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், இரவு நேரத்திலும் விமானம் தரை யிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு வரு கிறது. விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்கான தேவையான நிலங் களை கையகப்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டது. ஆனால், சம்பந்தப் பட்டவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. அந்த பணிகளும் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க் கிறோம், என கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.