முந்தய பக்கம்

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மக்கள் மறியல்!

8 Jun 2026, 10:54 pm
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மக்கள் மறியல்!
<p><strong>குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மக்கள் மறியல்!</strong></p><p>சேலம், ஜூன் 8- தேக்கம்பட்டி ஊராட்சியில் கடந்த 6 மாதங் களாக நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப் பாட்டை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேலம் பிரதான சாலையில் திங்களன்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், கருப்பூர் பேரூராட் சிக்குட்பட்ட தேக்கம்பட்டி ஊராட்சியில் கடந்த ஆறு மாதங்களாகக் குடிநீர் விநி யோகம் முறையாக செய்யப்படவில்லை. </p><p>இதுகுறித்து தேக்கம்பட்டி ஊராட்சி நிர்வா கத்திடம் பொதுமக்கள் முறையிட்டும், எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்து, சேலம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகள் மூலம் தடை யின்றி குடிநீர் விநியோகம் செய்கிறோம் என் கிற உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram