முந்தய பக்கம்

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

8 Jun 2026, 1:05 am
டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சேலம், ஜூன் 7- கோரிமேடு அருகே உள்ள டாஸ்மாக் கடை மீது பெட் ரோல் குண்டு வீசி தப்பிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், கோரிமேடு அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையை முடித்து விட்டு ஷட்டரை உட்புறமாக பூட்டி பணியாளர்கள் உள்ளே இருந்தபடி இருப்புகளை சரி பார்த்துக் கொண்டி ருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை டாஸ்மாக் கடை மீது அடுத்தடுத்து இரண்டு குண்டுகளை வீசிவிட்டு அருகே இருந்த கடை மீதும் மற்றொரு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர். டாஸ்மார்க் கடை முன்பு அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டின் மீது மோதியதில் பெட்ரோல் குண்டு வெளிப்புறமாக வெடித்து சிதறியது. இதில் கடை முன் வைக்கப்பட்டிருந்த சில மது பாட்டில்கள் தீப்பிடித்து எரிந் தது. இச்சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக டாஸ்மாக் கடையை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram