தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேலத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 3 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

28 May 2026, 11:07 pm
சேலத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 3 ஆவது நாளாக வேலைநிறுத்தம்
<p><strong>சேலத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 3 ஆவது நாளாக வேலைநிறுத்தம்</strong></p><p>சேலம், மே 28- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பாட்டில்களை திரும்பப் பெற்றால் 10 ரூபாய் வழங் கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் டாஸ் மாக் ஊழியர்கள் 3-வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட் டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 177 அரசு மதுபானக் கடைகளில் 700 -க்கும் மேற்பட்ட விற்பனையாளர் கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்க ளின் இந்தத் தொடர் போராட்டத்தின் காரணமாக, மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 12 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், போராட் டம் தொடரும் எனத் தொழிற்சங்கங் கள் எச்சரித்துள்ளன. கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டல்! அரசு டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டுள்ளதை பயன்படுத்தி, சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மது பானக்கூடங்களில் மதுப்பிரியர்க ளின் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக, சேலம் டிவிஎஸ் பகுதி யில் உள்ள ஒரு தனியார் பாரில் ஆயி ரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இச்சூழலை பயன்ப டுத்திக் கொண்டு, அங்கு ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.60 வரை கூடுதல் விலை வைத்து தாராளமாக விற்கப்படுகிறது. கூடுதல் விலையை கேள்வி கேட்கும் மதுப்பிரியர்களை கட்டுப்படுத்தவும் மிரட்டவும் பார் நிர்வாகத்தினர் அடியாட்களை பயன் படுத்த தொடங்கியுள்ளனர். அடியாட்களின் இந்த அராஜகப் போக்கால் பார்களில் எந்நேரமும் மோதல்கள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், குடிமகன்க ளின் இந்த அத்துமீறல்களால் அப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரி சலும், பொதுமக்களுக்கு பாதுகாப் பற்ற சூழலும் நிலவுகிறது. எனவே, அடியாட்களை வைத்து மிரட்டும் தனியார் பார்கள் மீது மாவட்ட நிர் வாகமும் காவல்துறையும் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.