தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காலிபாட்டில்களை திரும்பப்பெற தனியார் முகமை அமைக்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

2 Nov 2026, 11:57 pm
காலிபாட்டில்களை திரும்பப்பெற தனியார் முகமை அமைக்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

காலிபாட்டில்களை திரும்பப்பெற தனியார் முகமை அமைக்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

சேலம், நவ.2-காலிபாட்டில்களை திரும்பப்பெறுவதற்கு தனியார் முகமையை நியமித்து, அதற்கென தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் 165 கடைகள் செயல்பட்டு வருகின்

றன. இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் ரூ.9 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும் நிலையில்,பணிச்சுமை மற்றும் காலிபாட்டில்களைதிரும்பப்பெறும்போது ஏற்படும் சர்வர் பிரச்சனைகளால் சுமார் ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை. குறைந்த அளவிலான சம்பள உயர்வுடன்பணியாற்றி வரும் தங்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கிறது. மதுபானங்களை விற்பனை செய்யும்போது இரண்டு முறையும், காலிபாட்டில்களை திரும்பப்பெறும்போது ஒருமுறையும் என மூன்று முறை ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளது.

எனவே, காலி மதுபானப் பாட்டில்களை திரும்பப் பெற தனியார் முகமையை அமைத்து, புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக வரும் 13-ஆம் தேதி சென்னையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று சிஐடியு, எல்பிஎப், எல்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மூடி வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொடர்ந்து, சந்தியூர்ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் விஜயகுமார், மாநிலத் துணைத்தலைவர் செல்வகுமார், எல்பிஎப் நிர்வாகி ஜம்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இப்போராட்டத்தால், சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 165 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.