13 ஆண்டு சட்டப்போராட்டம் சேலம் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வெற்றி
3 Oct 2026, 1:06 am

13 ஆண்டு சட்டப்போராட்டம் சேலம் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வெற்றி

சென்னை, அக். 2 –சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் 2013 ஆம் ஆண்டு முதல் பணி மறுக்கப்பட்ட தொழிலாளர்கள், தொடர் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது முழு வெற்றியடைந்துள்ளனர்.

தங்களது பணிநீக்கத்தை எதிர்த்துத் தொழிற்தகராறு எழுப்பி வெற்றிபெற்ற தொழிலாளர்களுக்கு எதிராக ஆலை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்த நிலையில், அது தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீடும், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியாயின.

நீதிமன்ற உத்தரவுகளை சுமார் 2 ஆண்டு

களாக அமல்படுத்தாமல் காலம் தாழ்த்திய தோடு, சில தொழிலாளர்களைத் தற்காலிக

கடைநிலை ஊழியர்களாக எவ்வித சலுகை களுமின்றி நியமித்து நிர்வாகம் ஏமாற்ற முயன்றது. இந்த அடக்குமுறைகளை எதிர்த்து 6 தொழிலாளர்கள் மட்டும் நீதி மன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் நிர்வாகத்தின் பல்வேறு முயற்சிகளை மீறி, அவமதிப்பு வழக்கு விசாரணை மூலம் பொது மேலாளர் சிறைக்குச் செல்லும் சூழல் உருவானதைத் தொடர்ந்து, இறுதி நேரத்தில் 3 தொழிலாளர்களுக்குப் பணித்தொடர்ச்சியுடன் கூடிய முந்தைய பணி மற்றும் பின்சம்பளம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, அத்தொழிலாளர்கள் உரிய மரி யாதையுடன் மீண்டும் பணியில் சேர உள்ளனர்.

29 தொழிலாளர்கள் உரிமைகளை இழந்த போதிலும், இறுதிவரை உறுதி யுடன் நின்ற 6 தொழிலாளர்களில் இவர்களுக்கான நீதி கிடைத்துள்ளது. சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஆர்.ரெங்கராமனுஜம் வழி காட்டுதலில், வழக்கறிஞர் பிரதாபன் ஜெயராமன், இளவல் வழக்கறிஞர்கள் எஸ்.ருத்ரநாத், வி.தேவப்பிரியா, பொன்னுதுரை, ஜி.சுதாங்கன் ஆகியோரின் ஒத்துழைப்போடு வழக்கு நடத்தப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், வழக்கறிஞர்கள் எஸ்.சிவக்குமார், கே.கே.ராம்சித்தார்தா, யேசுதாஸ் ஆகியோர் இணைந்து வாதாடி னர். ரிட் மேல்முறையீட்டு அவமதிப்பு வழக்கிலும் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.