சர்வதேச ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டி சேலம் மாணவிகளுக்கு வெண்கல பதக்கம்
3 Nov 2026, 12:16 am
<p><strong>சர்வதேச ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டி சேலம் மாணவிகளுக்கு வெண்கல பதக்கம்</strong></p><p>சேலம், நவ.2-சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் சேலத்தை சேர்ந்த 2 மாணவிகள் வெண்கல பதக்கம் வென்ற நிலையில், சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.</p><p>சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தமிழ்நாடு சாப் டென்னிஸ் அகாடமியில் ஓமலூரை சேர்ந்த தனிகா (15) மற்றும் பூமிநாயக்கன்பட்டி ஓம்சக்தி நகரைசேர்ந்த நிஷாலினி (18) ஆகியோர் பயிற்சி பெற்று வந்தனர். கடந்த அக்.26 ஆம் தேதியன்று சீனாவில் 5 ஆவதுசர்வதேச ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. இதில், இருவரும் இந்தியா சார்பில் பங்கேற்று விளையாடி வெண்கல பதக்கம் வென்று, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்ந்தனர். தொடர்ந்து, சொந்த ஊர் திரும்பிய மாணவிகளுக்கு ஓமலூர் பேருந்து நிலையத்தில் திங்களன்று தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் அகாடமி மற்றும் பொதுமக்கள் சார்பில் மாலை அணிவித்து, பயனாடை போர்த்தி உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டு மாணவிகளையும் வீடு வரை பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.</p>
