முந்தய பக்கம்

பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் மறியல்

16 Jul 2026, 10:14 pm
பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் மறியல்
<p><strong>பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் மறியல்</strong></p><p>சேலம், ஜூலை 16- நங்கவள்ளி பகுதியில் பள்ளிக்கு செல்ல போதிய பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சேலம் மாவட்டம், மேட்டூர் நங்கவள்ளி பகுதியில் பள்ளி மாணவர்கள் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் அரசு பள்ளி மாணவர்கள் வியாழனன்று சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நங்க வள்ளி–தாரமங்கலம் சாலையில் பள்ளிக்கு சென்று வர சிரமம் இருப்பதாகவும், கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாண வர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு வந்து மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென் றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram