தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவன் இறப்புக்கு நீதி கேட்டு, பள்ளி வளாகத்தில் தர்ணா!

2 Sept 2026, 10:52 pm
மாணவன் இறப்புக்கு நீதி கேட்டு, பள்ளி வளாகத்தில் தர்ணா!

மாணவன் இறப்புக்கு நீதி கேட்டு, பள்ளி வளாகத்தில் தர்ணா!

சேலம், செப்.2-எடப்பாடி அருகே அரசுப்பள்ளி மாணவன் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு பள்ளி வளாகம் முன்பு பெற்றோர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த செட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், கோனேரிப்பட்டி, அக்ரஹாரம், வட்ராம்பாளையத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் (17) 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் பள்ளியில் செல்போன் பயன்படுத்தியதாகக்கூறி, தலைமை ஆசிரியர் கடந்த ஆக.21 ஆம் தேதி மாணவனின் பெற்றோர்களை அழைத்து மாற்றுச்சான்றிதழை (டி.சியை) வாங்கிச் செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் ராமகிருஷ்ணன், ஆக.23 ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இதற்கு காரணமான இரண்டு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறிமாணவனின் பெற்றோர் தேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பெற்றோர் மற்றும் இந்திய மாணவர் சங்கம், தமிழக விவசாய சங்க அமைப்பினர் புதனன்று பள்ளி வளாகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்ககிரி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர் நாகராஜன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை இப்பள்ளியிலிருந்து மாற்றப்பட்டால் மட்டுமே இப்போராட்டம் கைவிடப்படும் வலியுறுத்தப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல், போராட்டம் தொடர்ந்தது. இதில், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டார்வின், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.