தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தில் மேலும் ஒரு உயிரைப் பறித்த நீட் தேர்வு! சேலம் மாணவி தூக்கிட்டு தற்கொலை

19 Jun 2026, 8:49 pm
தமிழகத்தில் மேலும் ஒரு  உயிரைப் பறித்த நீட் தேர்வு! சேலம் மாணவி தூக்கிட்டு தற்கொலை

தமிழகத்தில் மேலும் ஒரு உயிரைப் பறித்த நீட் தேர்வு! சேலம் மாணவி தூக்கிட்டு தற்கொலை

சேலம், ஜூன் 19 - ஜூன் 21 அன்று நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு அழுத்தத்தால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் - புவனேஸ்வரி தம்பதியினர். சேகர் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். இதில், மூத்த மகள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஐடி துறையில் பணியாற்றுகிறார்.

இந்நிலையில், இளைய மகள் கோபிகா 12-ஆம் வகுப்பு தேர்வு முடித்துவிட்டு, பன்னிரண்டாம் வகுப்பில் 440 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயின்று வந்துள்ளார். ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் அவர் வெற்றிபெற முடியவில்லை.

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வையும் அவர் எழுதியிருந்த நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுத்தான், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) அன்று மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தான், நீட் தேர்வு தொடர் அழுத்தத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், மனமுடைந்த அவர், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சின்னப்பம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.