தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலையோர விற்பனையாளர்களை பாதுகாத்திட வலியுறுத்தி தொழிற்ச்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

7 Oct 2026, 12:29 am
சாலையோர விற்பனையாளர்களை பாதுகாத்திட  வலியுறுத்தி தொழிற்ச்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

சாலையோர விற்பனையாளர்களை பாதுகாத்திட வலியுறுத்தி தொழிற்ச்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.6-சாலையோர விற்பனையாளர்களை பாதுகாத்திட வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் சாலையோர விற்பனையாளர்கள் சங்ககூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை ஒன்றிய, மாநில

அரசுகள் பறிக்கக் கூடாது. காவல்துறையின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும். சாலைவியாபாரிகளுக்கு நகராட்சி மாநகராட்சி முறையான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு ரசீது வழங்க வேண்டும். இடைத்தரகர்கள் கொள்ளை வசூலுக்கு முடிவு கட்ட வேண்டும். வியாபாரிகளின் மேம்படுத்துதல் மற்றும் முறைபடுத்துதல் சட்டம் 2014 இன் படி பாதையோர வியாபாரிகளைபாதுகாத்திட வேண்டும்.உண்மையான சாலையோர விற்பனையாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.

முறையற்ற விற்பனையாளர் குழுவை கலைத்துவிட்டு புதிய விற்பனையாளர் குழுவை முறையான தேர்தல் மூலம் அமைத்திட வேண்டும். சேலம் மாவட்டம் முழுவதும் கட்டணம் வசூலிப்பதற்கு ஒப்பந்தம் விடுவதை கைவிட்டு நீதிமன்ற வழிகாட்டுதலின் படி உள்ளாட்சி நிர்வாகமே கட்டணத்தை வசூலிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் விற்பனைப்பகுதி விற்பனையற்ற பகுதி என்பதை தொழிற்சங்கங்களின் ஆலோசனையை பெற்று தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் சேலம் மாவட்ட சாலையோர விற்பனையாளர்கள் சங்க கூட்டுக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.யூடியூசி மாநிலத் தலைவர் வி.ராஜேந்திரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், சாலையோரவிற்பனையாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.இ.இளங்கோ, மாவட்டப் பொருளாளர் எஸ்.கார்த்திக், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் எஸ்.சம்பத், மாவட்ட பாதையோர வியாபாரிகள் சங்க தலைவர் எ.மோகன் யூடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.ஜெயராமன் மற்றும் சேலம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.