சேலம் பாலியல் கொடூரம் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
16 Jun 2026, 10:36 pm

சேலம் பாலியல் கொடூரம் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 16 - சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

இதன் பின்னணியில் உள்ள அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடதுசாரி பொது அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாநகரப் பகுதியில் மணிகண்டன் என்ப வர் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை வைத்தே மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன், அவர்களைப் பாலியல் வணிகத்திலும் தள்ளிய கொடூரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மணி கண்டனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இருப்பினும், இக்கொடூரத்தின் பின்னணியில் பெரிய அளவிலான கும்பல் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், வழக்கை உடனடி யாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக் கும் உரிய பாதுகாப்பு வழங்கவும், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.வைரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கார்த்திக், மாநிலப் பொருளாளர் சந்துரு ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.

மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரிய சாமி, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலை வர் டார்வின், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கனகராஜ், கிழக்கு மாநகரச் செய லாளர் பச்சமுத்து, மேற்கு மாநகரச் செயலாளர் கணேசன், பனமரத்துப்பட்டி குமார் மற்றும் மாதர் சங்க ஒன்றியச் செயலாளர்கள் மகேஸ்வரி, ரம்யா தேவி உட்பட திரளானோர் பங்கேற்றனர்.