நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்து பள்ளி மாணவர்கள் அசத்தல்
10 hours before

நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்து பள்ளி மாணவர்கள் அசத்தல்

சேலம், ஆக.7-சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே யுனிவர்சல் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.இப்பள்ளியில் “அட்டல் டிங்கரிங் லேப்” எனப்படும் கணினி ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தில் மாணவர்கள் கணினி தொடர்புடைய தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்திடும் பல்வேறு வகையிலான சாதனங்கள் மற்றும் மென்பொருள்களை உருவாக்கி வருகின்றனர்.

அதன்ஒருபகுதியாக இப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் குழுவினர் அண்மையில் நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.அதன் செயல்பாடு குறித்து மாணவர்கள் கூறுகையில்: “ஹோம் சர்வர்” எனும் தனித்துவமான நெட்வொர்க் மூலம்செயல்படக்கூடிய இந்த நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த ஒரு முறைகேடும் செய்ய இயலாது. இந்த இயந்திரத்தில் வேறு ஏதேனும் இணையதள தொடர்பினை இணைக்க முயற்சித்தால் இந்த இயந்திரம் தானாகவே தொடர்பைத் துண்டித்துக் கொள்ளும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இயந்திரத்தை வெளி நபர்கள் ஹேக் செய்யவும், இதில் பதிவான ஓட்டு விவரங்களை மாற்றி அமைக்கவும் இயலாது. இந்த நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விரைவாக எண்ணிடம் வகையிலும், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற மொத்த வாக்குகள் மற்றும் வாக்கு வித்தியாசம் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் ஒரு சில நொடிகளில் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரத்தின் மூலம் யுனிவர்சல் பள்ளியின் மாணவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவினை சம்பந்தப்பட்ட மாணவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.புதிய நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்த மாணவர்களை யுனிவர்சல் பள்ளியின் தாளாளர் சீனிவாசன், இயக்குனர் சக்தி சீனிவாசன் பள்ளியின் முதல்வர் ஜெகதீஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.