தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சம்பள உயர்வின் நிலுவைகளை வழங்கிடுக பள்ளிக்கல்வித்துறை தூய்மைப் பணியாளர்கள் முழக்கம்

2 Nov 2026, 11:56 pm
சம்பள உயர்வின் நிலுவைகளை வழங்கிடுக பள்ளிக்கல்வித்துறை தூய்மைப் பணியாளர்கள் முழக்கம்
<p><strong>சம்பள உயர்வின் நிலுவைகளை வழங்கிடுக பள்ளிக்கல்வித்துறை தூய்மைப் பணியாளர்கள் முழக்கம்</strong></p><p>சேலம், நவ.2-பள்ளி தூய்மைப் பணியாளர்களின் சம்பள உயர்வின் நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு ஆணை வழங்கி 11 மாதங்கள் கடந்தும் இதுவரை சம்பள உயர்வு உயர்த்தப்படவில்லை. உடனடியாக சம்பள உயர்வை வழங்க வேண்டும். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். ஐந்தாம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர் நலவாரிய அட்டை அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் திங்களன்று கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட அமைப்பாளர் ஜி.சத்தியபாமா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவர் பிரதாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.