இடிந்து விழும் அபாயத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி
17 Jun 2026, 10:09 pm
<p><strong>இடிந்து விழும் அபாயத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி</strong></p><p>சேலம், ஜூன் 17- சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றி யம் வெள்ளரிவெள்ளி ஊராட்சிக்குட் பட்ட வேட்டுவப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்ற வலியுறுத்தி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பள்ளியில் சுமார் 44 மாணவ, மாணவிகளும், அங்கன்வாடி மையத் தில் 20 குழந்தைகளும் பயின்று வரு கின்றனர். பள்ளி வளாகத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக பயன்பாடின்றி பழுதடைந்து காணப்படும் இந்த தொட்டி, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து பலமுறை அதிகாரி களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெற் றோர்கள் புதனன்று பள்ளி நுழைவா யில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பூலாம் பட்டி காவல்துறையினர் பெற்றோர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந் தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நீர் தேக்க தொட்டியை அகற்ற உடனடி நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் ஒரு மணி நேரத்திற் கும் மேலாக பரபரப்பு நிலவியது.</p>
