பள்ளி அருகே பேருந்து நிற்காததால் சர்ச்சை; புகாரையடுத்து அமைச்சர் உடனடி நடவடிக்கை
8 Jun 2026, 11:02 pm
<p><strong>பள்ளி அருகே பேருந்து நிற்காததால் சர்ச்சை; புகாரையடுத்து அமைச்சர் உடனடி நடவடிக்கை</strong></p><p>சேலம், ஜூன் 8- சேலம் மாவட்டம், அயோத்தி யாபட்டணம் அருகே உள்ள கூட் டாத்துப்பட்டியில், பள்ளி மாணவி களை ஏற்றிச் செல்ல அரசு பேருந்து பள்ளி அருகே நிற்காததால் ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டாத்துப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களின் பாது காப்பான பயணத்திற்காக, பள்ளி முடியும் நேரத்தில் அரசுப் பேருந்து கள் பள்ளி வளாகத்தின் அருகே நின்று மாணவர்களை ஏற்றி, இறக்குவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று, குறிப்பிட்ட ஒரு அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பள்ளி அருகே பேருந்தை நிறுத்தாமல், தூரத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தியுள்ளார். இதனால் பள்ளி மாணவிகள் தங்களது கனமான புத்தகப் பைகளுடன் அவசரமாக ஓடி வந்து பேருந்தில் ஏற வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதனைப் பார்த்த அப்பகுதி யைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒரு வர், ஓட்டுநரிடம் சென்று பள்ளி அருகே பேருந்தை நிறுத்தாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த ஓட்டுநர், பள்ளி அருகே பேருந்தை நிறுத்த முடி யாது, பேருந்து நிறுத்தத்தில் மட்டும் தான் நிறுத்துவேன் எனக் கூறி சமூக ஆர்வலருடன் பொதுமக்க ளின் முன்பாகவே கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்தச் சமூக ஆர் வலர், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்தி பனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு புகார் தெரி வித்ததோடு, எழுத்துப்பூர்வமான புகாரையும் அனுப்பினார். புகாரை பெற்றுக் கொண்ட அமைச்சர், உடனடியாகப் போக்கு வரத்துத் துறை அதிகாரிகளுடன் பேசி கூட்டாத்துப்பட்டி பள்ளி அருகே மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றி இறக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த உத்தர வைத் தொடர்ந்து, தற்போது அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் பள்ளி அருகே நின்று மாணவிகளை ஏற்றி, இறக்கி வருகின்றன. இதற்கிடை யில், பள்ளி அருகே பேருந்தை நிறுத்த மறுத்து பொதுமக்களுடன் ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுப டும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி வரு கிறது.</p>
