முந்தய பக்கம்

வீட்டுமனை வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்

3 Jun 2026, 10:35 pm
வீட்டுமனை வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்
<p><strong>வீட்டுமனை வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்</strong></p><p>சேலம், ஜூன் 3- சங்ககிரி வட்டாரத்தில் வீட்டு மனை மற்றும் நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, வட்டாட் சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், சங்ககிரி வட் டாரம், தேவணக்கவுண்டனூர் கிரா மத்தில் உள்ள 2.50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ஏழை மக்க ளுக்கு வீட்டுமனையாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த னர். மேலும், சுங்குடி, வருதம்பட்டி, கோனோரிப்பட்டி, நல்லங்கியூர், மோரூர் மேற்கு, வைகுந்தம் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த பொதுமக்களும் புதனன்று வீட்டுமனை கேட்டு மனு அளித்தனர். சங்கத்தின் வட்டச் செயலாளர் ஆர்.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மனு கொடுக் கும் போராட்டத்தை தமிழ்நாடு விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.கணபதி துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஏ.ராமமூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.தங்கவேல், வட்டச் செயலாளர் ஏ.ஆறுமுகம் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இதில், நிர்வாகிகள் சி.எஸ்.பழனியப்பன், மாணிக்கம், பானுமதி, ராஜேந்தி ரன் உட்ப ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக, சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.கே.சேகர் நிறை வுரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram