தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கட்டணக் கழிப்பறையில் தகராறு; தூய்மைப் பணியாளர்கள் மீது திராவகம் வீச்சு

17 Jun 2026, 12:19 am
கட்டணக் கழிப்பறையில் தகராறு;  தூய்மைப் பணியாளர்கள் மீது திராவகம் வீச்சு
<p><strong>கட்டணக் கழிப்பறையில் தகராறு; தூய்மைப் பணியாளர்கள் மீது திராவகம் வீச்சு</strong></p><p>சேலம், ஜூன் 17- பச்சப்பட்டி பகுதியில் உள்ள கட்ட ணக் கழிப்பறையில் கட்டணம் செலுத்து வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பெண் தூய்மைப் பணியாளர்கள் மீது கழிப்பறை சுத்தம் செய்ய பயன்படுத் தப்படும் திராவகம் (ஆசிட்) வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. சேலம் மாநகராட்சி, 41 ஆவது கோட்டம், பச்சப்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள மாநகராட்சி பொது கழிப்பறையை குமரன் நகர் பகுதியை சேர்ந்த பச்சியப்பன் (65) மற்றும் அவ ரது மனைவி லட்சுமி (57) ஆகியோர் பராமரித்து வருகின்றனர். செவ்வா யன்று அப்பகுதியில் தூய்மைப் பணி யில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மைப் பணியாளர்கள் கழிப்பறையை பயன் படுத்தியபோது கட்டணம் செலுத்த வில்லை என கூறப்படுகிறது. இதுதொ டர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு வாதம் முற்றிய நிலையில், பச்சியப்பன் மற்றும் லட்சுமி தம்பதியினர் தூய்மைப் பணியாளர்களை தாக்கியதுடன், கழிப் பறை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திராவகம் (ஆசிட்) திரவத்தையும் அவர்கள் மீது வீசினர். இதில் சம்பூர ணம் மற்றும் இலட்சுமி என்ற இரு பெண் தூய்மைப் பணியாளர்கள் லேசான காயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், பச்சி யப்பன் மற்றும் லட்சுமி தம்பதியினரை கழிப்பறைக்குள் அடைத்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை காவல்துறையினர் இருவரையும் மீட்டு காவல் நிலையத் திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் காய மடைந்த தூய்மைப் பணியாளர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.