புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசி.
11 Oct 2026, 9:04 pm

புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசி.

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி

சென்னை, அக்.11 -புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசியை முதன் முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சேலம் மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, நார்வே, டென்மார்க், இத்தாலி, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளன.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 340-க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் செயல்படுகின்றன. சேலம் மரவள்ளிக்கிழங்கின் தரம் மற்றும் தனிச்சுவை காரணமாக, அதிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசிக்கு 2023ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. சேலம் மாமாங்கத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் சேகோ சர்வ் கூட்டுறவு சங்கம், விவசாயிகளிடம் கிழங்கைக் கொள்முதல் செய்து ஜவ்வரிசி தயாரிக்கிறது.இங்கு தயாராகும் ஜவ்வரிசி குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. நாட்டின் ஜவ்வரிசி உற்பத்தியில் 80 சதவீதம் சேலம் மாவட்டத்தின் பங்களிப்பாகும் என்று தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்றுமதிக்கு முன்வரும் தொழில் முனைவோருக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றும், ஜவ்வரிசியுடன் கிரானைட், பருத்தித் துணிகள், வெள்ளிக் கொலுசு உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.