தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார்மய நடவடிக்கை: கூட்செட் தொழிலாளர்கள் ஆவேசம்

10 Oct 2026, 11:21 pm
தனியார்மய நடவடிக்கை: கூட்செட் தொழிலாளர்கள் ஆவேசம்

தனியார்மய நடவடிக்கை: கூட்செட் தொழிலாளர்கள் ஆவேசம்

சேலம், அக்.10-ரயில்வே கூட்செட்களில் ஜிசிடி, பிஎஃப்டி, ஆல்டர்நெட் கூட்செட் போன்ற தனியார்மய நடவடிக்வலியுறுத்தி சிஐடியு சேலம் ரயில்வே கூட்செட் ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே கூட்செட்டில் 24 மணி நேர வேலை என்னும் ‘ரவுண்ட் தி கிளாக்’ என்னும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வேலை என்ற பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

ரயில்வே கூட்செட்களை ஜிசிடி, பிஎஃப்டி, ஆல்டர்நெட் கூட்செட்

போன்ற தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

குடிநீர், ஓய்வறை, குளியலறை, கழி

வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சேலம் ரயில்வே கூட்செட் ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பால் மார்க்கெட் கூட்செட்டில் சனியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் செயலாளர் ஏ.கோவிந்தன் தலைமை வகித்தார். சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.வெங்கடபதி, சங்கத்தின் பொருளாளர் பி.சக்திவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், சங்கத்தின் உதவித்தலைவர்கள் பி.சங்கர், எம்.சுந்தர், உதவிச்செயலாளர்கள் ஆர்.சரவணன், பி.குபேந்திரன் மற்றும் ரயில்வே கூட்செட் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.