முந்தய பக்கம்

8 ஆவது ஊதியக்குழு பணிகளை விரைவுபடுத்துக

5 Jun 2026, 9:12 pm
8 ஆவது ஊதியக்குழு பணிகளை விரைவுபடுத்துக

சேலம், ஜூன் 5-

இடமாறுதல் கேட்ட ஊழியர்கள் அனைவருக்கும் உடனடியாக உத்தரவு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு – டிஆர்இயூ-வினர் சேலம் கோட்ட மேலாளர் அலுவலகத்தில் வெள்ளியன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, டிவிஷன் செயலாளர் எம்.முருகேசன் தலைமை தாங்கினார். துணைபொதுச் செயலாளர் கே.அல்லிமுத்து போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில், ரயில்வே துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மண்டல மற்றும் கோட்ட அளவில் இடமாறுதல் கோரி விண்ணப்பித்த ஊழியர்கள் அனைவருக்கும், ரயில்வே நிர்வாகம் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக இடமாறுதல் உத்தரவை வழங்க வேண்டும். எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டும் அதற்கான பணிகள் முடங்கியுள்ளன; எனவே, புதிய ஊதியக் குழுவின் பணிகளை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் டிஆர்இயூ பொதுச்செயலாளர் பேபி சகிலா, துணைப் பொதுச்செயலாளர் பிஜு, மண்டல துணைத்

தலைவர் சாம்பசிவம் மற்றும் சிஐடியு மாவட்டச் செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட திரளான ரயில்வே தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram