தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேலம் கோட்ட ரயில்களில் டிக்கெட் பரிசோதனை: ஜூலை மாதத்தில் ரூ.2.19 கோடி அபராதம் வசூல்

10 hours before
சேலம் கோட்ட ரயில்களில் டிக்கெட் பரிசோதனை: ஜூலை மாதத்தில் ரூ.2.19 கோடி அபராதம் வசூல்

சேலம் கோட்ட ரயில்களில் டிக்கெட் பரிசோதனை: ஜூலை மாதத்தில் ரூ.2.19 கோடி அபராதம் வசூல்

சேலம், ஆக. 7–தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட தீவிர டிக்கெட் பரிசோதனை மூலம் ரூ.2 கோடியே 19 லட்சத்து 20 ஆயிரத்து 14 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வேநிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே செய்தித் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சேலம் கோட்ட வர்த்தகப் பிரிவு முதுநிலை மேலாளர் ஒய். சரவணகுமார் வழிகாட்டுதலின்படி, டிக்கெட் பரிசோதனை படையினர் ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் ஜூலை மாதத்தில் மொத்தம் 4,043 சோதனைகளை மேற்கொண்டனர். இதில்பல்வேறு விதிகளை மீறி பயணித்ததாக மொத்தம் 23,320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதன்படி, முறையான பயணச்சீட்டு இன்றி பயணித்த 11,202 நபர்களிடமிருந்து ரூ.1,22,43,999 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2025 ஆம் ஆண்டின் ஜூலை மாத வசூலை விட (ரூ.1,03,69,140) 18 சதவீதம் அதிகமாகும். அதேபோல, மாறுபட்ட வகுப்பு அல்லது தவறான சான்றுகளுடன் பயணித்த 12,024 முறையற்ற பயண வழக்குகள் கண்டறியப்பட்டு, ரூ.96,32,623 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இது முந்தைய ஆண்டின் ஜூலை மாதத்தை விட வழக்குகளின் எண்ணிக்கையில் 16.2சதவீதமும், வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் 74.7 சதவீதமும் உயர்வாகும்.மேலும், பதிவு செய்யப்படாத மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் கொண்டு சென்ற 94 வழக்குகளில் ரூ.43,392 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில் பயண சீட்டில் குறிப்பிட்டுள்ள போர்டிங் நிலையத்திலிருந்து மட்டுமே பயணத்தை தொடங்க வேண்டும். யாராவது ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் வேறு நபர் பயணித்தால் அல்லது மூத்த குடிமக்களுக்கான சலுகையை தவறாகப் பயன்படுத்தினால் அது டிக்கெட் இல்லாத பயணமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

பயணிகள் ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ, ஏசி 2-டயர் வகுப்பில் 50 கிலோ, ஏசி 3-டயர் மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளில் 40 கிலோ, இரண்டாம் வகுப்பில் (செகண்ட் கிளாஸ்) 35 கிலோ வரை மட்டுமே இலவச லக்கேஜாக எடுத்துச்செல்ல அனுமதி உண்டு. பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க இந்த அளவுகளுக்குள்பொருட்களை எடுத்துச் சென்று ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.