கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைப்பு சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு
1 Oct 2026, 12:07 am

கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைப்பு சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சேலம், செப்.30-பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கவும், கூடுதல் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யவும் மூன்று ஜோடி விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படுவதாக சேலம் கோட்ட தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.10 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயிலில் (எண்: 16159) செப்டம்பர் 29 முதல் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி (Sleeper Class) நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, மங்களூரு சென்ட்ரலிலிருந்து காலை 06.45 மணிக்கு புறப்படும்மங்களூரு சென்ட்ரல் – சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் (எண்: 16160) அக்டோபர் 1 முதல் ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும். சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 07.15 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்

ரல் – கோவை சதாப்தி விரைவு ரயில் (எண்: 12243) மற்றும் கோவையிலிருந்து பிற்பகல் 03.05 மணிக்கு புறப்படும் கோவை – சென்னை சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில் (எண்: 12244) ஆகிய இரண்டிலும் அக்டோபர் 1 முதல்

தலா ஒரு குளிர்சாதன இருக்கை வசதி கொண்ட பெட்டி (AC Chair Car) நிரந்தரமாக சேர்க்கப்படுகிறது.

இதேபோல், சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 04.00 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் குளிர்சாதன விரைவு ரயிலில் (எண்: 22207) அக்டோபர் 2 முதலும், திருவனந்தபுரத்திலிருந்து இரவு 07.15 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் குளிர்சாதன விரைவுரயிலில் (எண்: 22208) அக்டோபர் 4 முதலும் தலா ஒரு மூன்றடுக்கு குளிரசாதனப் பெட்டி (AC 3-Tier) நிரந்தரமாக இணைக்கப்பட்டு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.