தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

1 Jun 2026, 11:37 pm
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
<p><strong>சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்</strong></p><p>சேலம், ஜூன் 1- சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் கல்குவாரியை மூட வேண்டும் என உம்பிளிக்கம்பட்டி சுற்றுப்புற பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில், ஆதார், ரேஷன் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகில் உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியில் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் கிரஷர் நிறுவனங்களை மூடிடவும், குவாரிக்கான குத்தகை ரத்து செய்ய வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை ரேஷன் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஓடையின் அருகே 50 மீட்டர் தொலைவில் இருப்பதால் அங்கு நிலத்தடி நீர் முழுமையாக மாசடைந்து விட்டது. குடியிருப்பு பகுதிகள் அதிகம் இருப்பதால் குவாரிகளினால் அதிக சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. மேலும், இது சம்பந்தமாக கருத்து தெரிவிக்கும் பொதுமக்கள் மீது குவாரி உரிமையாளர்கள் அடியாட்களை கொண்டு மிரட்டுகின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட குவாரியின் உரிமத்தை ரத்து செய்து நிரந்தரமாக கல்குவாரியை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.