ரூ.23 லட்சம் கேட்டு தனியார் மருத்துவமனை மிரட்டல் சிபிஎம், வாலிபர் சங்க போராட்டத்தால் நோயாளி மீட்பு!
17 Jun 2026, 10:02 pm

ரூ.23 லட்சம் கேட்டு தனியார் மருத்துவமனை மிரட்டல் சிபிஎம், வாலிபர் சங்க போராட்டத்தால் நோயாளி மீட்பு!

சேலம், ஜூன் 17- விபத்தில் காயமடைந்து தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் குடும் பத்தினரை, ரூ.23 லட்சம் கட்டக் கோரி மிரட்டிய நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின ரும் வாலிபர் சங்கத்தினரும் நடத் திய அதிரடி முற்றுகை போராட் டத்தின் விளைவாக, நோயாளி பாது காப்பாக மீட்கப்பட்டு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வி. நகரை சேர்ந்தவர் கோவிந்த ராஜ். தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த மே 31 அன்று வள்ளி புரம் அருகே நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் பலத்த காயம டைந்தார். நாமக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட இவரை, ஒரு வழக்கறிஞர் தலையிட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் காவேரி மருத்துவமனையில் அனுமதித் துள்ளார்.

மருத்துவமனை நிர்வாகம் நெருக்கமாக இருப்பதால் கட் டணம் எதுவும் செலுத்த தேவை யில்லை என்றும், விபத்து வழக்கை தான் பார்த்து கொள்வதாகவும் கூறி கோவிந்தராஜின் குடும்பத்தினரை அவர் நம்ப வைத்துள்ளார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் கோவிந்தரா ஜின் உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த அவ ரது உறவினர்கள், நோயாளியை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைக்குக் கொண்டு செல்வ தாக கூறியுள்ளனர். அப்போது மருத்துவமனை நிர்வாகம், இது வரை ரூ.23 லட்சம் செலவாகியுள் ளது என்றும், அந்தப் பணத்தை உடனடியாக செலுத்திவிட்டுத்தான் நோயாளியை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறி மிரட்டி யுள்ளது. இ

தனால் அதிர்ச்சிய டைந்த குடும்பத்தினர் செய்வதறி யாது திகைத்தனர். இந்த கொடூர சுரண்டல் சம்ப வத்தை அறிந்த, மார்க்சிஸ்ட் கட்சி யினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வா யன்று இரவு சேலம் காவேரி மருத் துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து, சேலம் மாநகரம் அன்ன தானப்பட்டி காவல் உதவி ஆணை யாளர் மற்றும் காவல் ஆய்வாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கட்சியின் போராட் டத்திற்கும், காவல்துறையின் விசா ரணைக்கும் பயந்த தனியார் மருத் துவமனை நிர்வாகம், கட்டண மின்றி நோயாளியை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்க ஒப் புக்கொண்டது.

தொடர்ந்து, கோவிந் தராஜ் மீட்கப்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

முன்னதாக நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கனகராஜ், நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், சேலம் மேற்கு மாநகரச் செயலா ளர் கணேசன், கிழக்கு மாநகரச் செயலாளர் பச்சமுத்து, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரிய சாமி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.