தபால் நிலையங்களில் பண பரிவர்த்தனை முடக்கம்
9 Jul 2026, 11:43 pm
<p><strong>தபால் நிலையங்களில் பண பரிவர்த்தனை முடக்கம்</strong></p><p>சேலம், ஜூலை 9- கடந்த 3 நாட்களாக சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சேலத்தில் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் பண பரி வர்த்தனை செய்ய முடியா மல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தபால் நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மாநகரில் தலைமை தபால் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக தபால் நிலையம், அஸ்தம்பட்டி தபால் நிலையம் போன்ற முக் கிய தபால் நிலையங்களில் ஏராளமான வாடிக்கையாளர்கள் நாள்தோறும் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தபால் நிலையங்க ளில் சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறி பண பரிவர்த் தனை முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காசோலை மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனை முற்றிலுமாக முடக் கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். இதுதவிர தபால் நிலையத்தில் மேற் கொள்ள கூடிய ஆதார் சேவை, செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் முறையாக நடைபெற வில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தினந்தோறும் தபால் நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல் கின்றனர். தபால் நிலையங்களில் ஏற்பட்டுள்ள இந்த குறை பாடுகளை உடனடியாக சரி செய்திட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.</p>
