தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆபாச வீடியோ எடுத்து 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை சேலத்திலும் ஒரு பொள்ளாச்சி பாணி கொடூரம்!

13 Jun 2026, 10:58 pm
ஆபாச வீடியோ எடுத்து 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை சேலத்திலும் ஒரு பொள்ளாச்சி பாணி கொடூரம்!

ஆபாச வீடியோ எடுத்து 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை சேலத்திலும் ஒரு பொள்ளாச்சி பாணி கொடூரம்!

சேலத்திலும் ஒரு பொள்ளாச்சி பாணி கொடூரம்!

சேலம், ஜூன் 13- சேலம் அருகே பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்தவரை போலீ சார் கைது செய்துள்ளனர். அவரிடமி ருந்து 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடி யோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. இச்சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30). இவர் அப்பகு தியில் மளிகைக் கடை நடத்தி வரு கிறார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை யன்று பெண் ஒருவர் சமூக வலைத்தளங் களில் வெளியிட்ட ஆடியோ ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் அப்பெண் கூறி யிருப்பதாவது, “நான் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். குடும்பச் சூழ்நிலை காரணமாக சிலரிடம் கடன் வாங்கியி ருந்தேன்.

அதைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்தபோது, நெய்க்காரப் பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் அறி முகமாகி, நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வாங்கித் தந்தார்.

இதனால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. ஒருமுறை அவரது செல்போனை பார்த்தபோது, அதில் என்னைப்போல பல பெண்களின் ஆபாச வீடியோக் கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந் தேன். அதில் நான் அவருடன் இருந்த வீடி யோக்களும் இருந்தன. உடனடியாக அவற்றை நான் அழித்துவிட்டு, அவ ருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டேன்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், உன்னு டைய வீடியோக்கள் இன்னும் என்னிடம் உள்ளன, நான் கூப்பிடும் போதெல்லாம் நீ வர வேண்டும் என்று மிரட்டி வருகிறார்”- இவ்வாறு அந்த பெண் பேசியிருந் தார். இந்த விவகாரம் சேலம் மாநகர காவல் துறை ஆணையர் அனில் குமார் கிரியின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, உட னடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில், கொண்ட லாம்பட்டி போலீசார் நெய்க்காரப்பட்டி மணிகண்டனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

மணிகண்டனின் செல்போனை பறி முதல் செய்து ஆய்வு செய்தபோது, அதில் 50-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மூலம் மணிகண் டன், பண உதவி செய்வது போல பல பெண்களுடன் பழகி, அவர்களை பாலி யல் வன்கொடுமை செய்து, ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்தது உறுதி செய்யப்பட்டது.

சிறையில் அடைப்பு இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த அதிகாரப்பூர்வ புகாரின் பேரில், கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி கண்டனை கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்ப வத்தை நினைவூட்டும் வகையில் சேலத் தில் நடந்துள்ள இச்சம்பவம் பொதுமக்க ளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் கோரிக்கை

சென்னை, ஜூன் 13 - சேலம் பாலியல் வன்கொடு மைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது: சேலம் மாநகரப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை மணிகண்டன் என்பவர் ஆபாசமாக வீடியோ எடுத் தும், அதை வைத்தே மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் அப் பெண்களை பாலியல் வணிகத்தில் உள் ளாக்கியுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இந்த கொடுஞ்செயலை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. பின்புலத்தில் மேலும் பலர்? இச்சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண் டனை போலீசார் கைது செய்துள்ள னர். இருப்பினும் மணிகண்டன் பெண் களை மிரட்டி பாலியல் வணிகத்தில் தள்ளியுள்ளதால் இதன் பின்புலமாக மேலும் பலர் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, இவ்வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி இச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளி கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டுமென வும், பாதிக்கப்பட்ட பெண்கள் அனை வருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவ தோடு, அவர்கள் குறித்த தகவல்களை கசியவிடாமல் பாதுகாக்கவும், இன் னும் வேறு யாராவது பாதிக்கப்பட்டி ருக்கிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்துகிறது. அரசியல் அழுத்தங்கள் கூடாது குற்றம் சாட்டப்பட்ட நபர் தவெக கட்சியை சேர்ந்தவர் என்று ஊட கங்களில் செய்திகள் வெளிவந்துள் ளன. அது உண்மையாக இருப்பின் அவரை கட்சியிலிருந்து நீக்குவதுடன் எவ்வித அரசியல் அழுத்தமுமின்றி விசாரணை நேர்மையாக நடைபெறு வதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பி டப்பட்டு உள்ளது.

பெண்களை எப்படி பாதுகாப்பீர்கள்!

உ.வாசுகி கேள்வி தமிழகத்தில் பல்வேறு பாலியல் குற்றச் சம்பவங்களில் தொடர்பு டையவர்கள், கைது செய்யப்படு பவர்கள் ஆளும் தவெக நிர்வாகி களாக இருப்பது குறித்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பின ரும், ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரு மான உ. வாசுகி கேள்வி எழுப்பி யுள்ளார். இதுதொடர்பாக, தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள அவர், “பெண்களுக்கு எதிரான பல வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் தவெக உறுப்பினர் களாக, நிர்வாகிகளாக இருப்ப தாகத் தகவல்.. கிரிமினல்களைக் கட்சிக்குள் வைத்துக் கொண்டு பெண்கள் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் “கட்சியிலும் அவர்கள் மீது நட வடிக்கை தேவை!” என்று வலி யுறுத்தியுள்ளார். பாலியல் குற்றச் சம்பவங்களில் உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரி, மாதர் சங்கம் சார்பில் ஜூன் 23 அன்று கண்டனப் பேரணி நடை பெற உள்ளதாகவும் குறிப்பிட்டுள் ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.