மாநகராட்சி பூங்காவில் கட்டண வசூல்: சிபிஎம் ஆர்ப்பாட்டம்
9 Jul 2026, 11:41 pm
<p><strong>மாநகராட்சி பூங்காவில் கட்டண வசூல்: சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சேலம், ஜுலை 9- பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் நடை பயிற்சிக்கு வரும் பொதுமக்களிடம் கட் டணக் கொள்ளையில் ஈடுபடும் பூங்கா பராமரிப்பாளர்களை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம், பள்ளப்பட்டி பகுதி யில் அமைந்துள்ள பள்ளப்பட்டி ஏரி பூங்கா மாநகராட்சிக்கு சொந்தமானது. இருப்பினும் பூங்கா பராமரிப்பை தனி யாருக்கு மாநகராட்சி விட்டு கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது. குறிப்பாக அங்கு காலை மற்றும் மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்ள வரும் பொதுமக்களிடம் அதிக கட்டண வசூ லில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்தும் மாநகராட்சி நிர்வாகம் பள்ளப்பட்டி ஏரி பூங்காவை தொடர்ந்து மாநகராட்சியின் பங்களிப்போடு செயல் படுத்த வேண்டும். பொதுமக்களிடம் கட்டண வசூல் செய்யக்கூடாது. பள்ளப் பட்டி பூங்காவை ஒப்பந்தம் செய்துள் ளதை ரத்து செய்து மாநகராட்சியே நிர் வாகிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பள்ளப் பட்டி ஏரி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதில், சேலம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கனகராஜ், வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
