தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேலம்: மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் அறிவிப்பையடுத்து ஆக.15 முதல் புதிய பேருந்து வசதி! அதிகாரிகள் உறுதி

12 Aug 2026, 10:51 pm
சேலம்: மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் அறிவிப்பையடுத்து ஆக.15 முதல் புதிய பேருந்து வசதி! அதிகாரிகள் உறுதி

சேலம்: மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் அறிவிப்பையடுத்து ஆக.15 முதல் புதிய பேருந்து வசதி! அதிகாரிகள் உறுதி

சேலம், ஆக.12–பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்துக்காக வரும் ஆகஸ்ட் 15 முதல் பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், மேல் தொம்பை மற்றும் கீழ்தொம்பை வன கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கீரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றுவருகின்றனர்.

மாலை வேளையில் போதிய பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் 5 கி.மீ தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவியது. மேலும் கீரிப்பட்டி பகுதியில் உள்ள மதுபானக் கடையால்மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்தது.கூடுதல் பேருந்து வசதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆத்தூர் தாலுகா குழு சார்பில் தம்மம்பட்டி கிளை மேலாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், புதனன்று (ஆக.12) தம்மம்பட்டி பணிமனை முன் காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்ட நிலையில், காவல்துறை முன்னிலையில் பேச்சுவார்த்தைநடைபெற்றது. இதில் சிபிஐ(எம்) மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வீ.இளங்கோ, தாலுகா செயலாளர்கள் ஏ.முருகேசன், கெங்கவல்லி தாலுகா செயலாளர் பி.தமிழ்மணி, தாலுகா உறுப்பினர்கள் ஆர்.வெங்கடாசலம், ஏ.முருகேசன், கே.பெரியண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தையின் முடிவில், ஆகஸ்ட் 15 முதல் மாணவர்களின் வசதிக்காக கீரிப்பட்டியிலிருந்து மேல் தொம்பை, கீழ்தொம்பைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாககைவிடப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.