2 ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
7 Oct 2026, 12:18 am

2 ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

சேலம், அக்.6-துய்மைப்பணியில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் இரண்டாவது நாளாககாத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சிகளில் தூய்மைப் பணிகளில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் தமிழக முழுவதும் திங்களன்று முதல் வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தின் இரண்டாவது நாளான செவ்வாயன்று சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் ஆத்தார் நகராட்சிகிளைத் தலைவர் முனியன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், பொருளாளர் வி. இளங்கோ, ஊரகவளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் எ.முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கிளை செயலாளர் சுபாஷ்,பொருளாளர் கணேசன் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இதன்பின்னர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்ஏ.ரங்கசாமி, ஏ.டி.கண்ணன், நகரச் செயலாளர் சீனிவாசன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் முருகேசன், சிபிஎம்நகரக்குழு உறுப்பினர் குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இதனையடுத்து திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் குமரன், ஒரு மாதத்திற்குள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.இதேபோன்று மல்லசமுத்திரம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் சிஐடியு சங்க மாவட்டச் செயலாளர் என்.வேலுசாமிதலைமையில் மனு வழங்கினர்.