கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு
5 Jun 2026, 10:14 pm
<p>சேலம், ஜூன் 5- </p><p>அயோத்தியாபட்டினம் அருகே உள்ள குள்ளம் பட்டி பகுதியில் அனுமதி இல்லாமல் கற்கள் மற் றும் மண் வெட்டி எடுப்பதாக கனிமவளத்துறை அதி காரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, கனிம வளத்துறை அதிகாரிகள் வெள்ளியன்று அந்த இடத் திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வின்போது, அனுமதியில்லாமல் டன் கணக்கில் கற்கள் வெட்டப்பட்டது கண்டறியப்பட் டது மேலும் பரீட் இல்லாமல் மாலை போல் குவித்து வைத்த மண் கண்டறியப்பட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்கு செயல்பட்டு வந்த மூன்று செங்கல் சூளைகளிலும் ஆய்வு செய்த பொழுது எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை என்பது கண்டுபிடிக்கப் பட்டது. தொடர்ந்து வாழப்பாடி தாசில்தார் முன்னி லையில் அனுமதி இல்லாமல் இயக்கப்பட்ட செங்கல் சூளைகளுக்கு நோட்டீஸ் வழங்கும் நடவ டிக்கையும் மேற்கொள்ள உத்தரவிட்டனர். மேலும், பர்மிட் இல்லாமல் கொட்டப்பட்ட மண் அளவீடு செய்து அதற்கான அபராதம் விதிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் கூறுகை யில், அனுமதி வாங்கி விட்டீர்களா என்று கேட்டதற்கு ஒருமுறை மட்டும் தான் அனுமதி வாங்கினோம் அதன் பின்பு வாங்கவில்லை என்று கூறிய நிலை யில் அனுமதி வாங்கிவிட்டு தான் செங்கல் தயாரிக்க வேண்டும், மண் எடுக்க வேண்டும். அனுமதி பெறா மல் ஒரு கல் கூட வெளியே செல்ல கூடாது அப்படி வாகனம் வெளியே வந்தால் வாகனத்தை பறிமுதல் பண்ணி விடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். </p>
