கூலித்தொழிலாளி படுகொலை: உறவினர்கள் சாலை மறியல்
3 hours before

கூலித்தொழிலாளி படுகொலை: உறவினர்கள் சாலை மறியல்

சேலம், அக்.4-ஓமலூர் அருகே பட்டப்பகலில் கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி அன்வர். இவர் ஞாயிறன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, அவரை இருவர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, வெள்ளாளப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் வைத்து அன்வரை தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து ஆவேசமடைந்த உற

வினர்கள் மற்றும் பொதுமக்கள் அன்வரின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் மதுக்கடையால் ஏற்படும் போதை தகராறே இந்த கொலைக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது. சம்பவம் குறித்து போலீசார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.