தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோரிக்கை வெற்றி ஆக்கிரமிப்பு நடைபாதையை மீட்டு சாலை அமைப்பு

3 Jul 2026, 1:29 am
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோரிக்கை வெற்றி ஆக்கிரமிப்பு நடைபாதையை மீட்டு சாலை அமைப்பு
<p><strong>தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோரிக்கை வெற்றி ஆக்கிரமிப்பு நடைபாதையை மீட்டு சாலை அமைப்பு</strong></p><p>சேலம், ஜூலை 2- கெங்கவல்லி வட்டத்திற்குட் பட்ட கோனேரிப்பட்டி காட்டுக் கொட்டாய் பகுதியில் ஆக்கிர மிக்கப்பட்ட நடைபாதையை மீட்க வேண்டும் என்கிற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, அரசு சார்பில் சாலை அமைக்கப் பட்டது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்திற்குட்பட்ட கோனேரிப் பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள அரசு தரிசு நிலத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்தி வந் தனர். இந்நிலையில், அந்த வழித் தடத்தை அப்பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரின் மனைவி ஜெயந்தி ஆக்கிரமித்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஏற்படுத்தினார். மேலும், ஈமச் சடங்கு ஊர்வலங்கள் செல்லவும், குடிநீர் வாகனங்கள் செல்லவும் அனுமதிக்காமல் பொதுமக்களை மிரட்டினார். இதையடுத்து, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புகார் மனு அளித்து, பொது மக்களின் நடைபாதையை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மனுவைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில் பொதுமக்களின் கோரிக்கை நியாயமானது என தெரியவந்ததையடுத்து, ஆக்கிர மிப்பு அகற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாலை அமைக் கும் பணிகள் வியாழனன்று மேற் கொள்ளப்பட்டன. இதன் மூலம் நீண்டகாலமாக நிலவி வந்த பிரச் சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரி வித்தனர். இந்த நடவடிக்கையை தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது. பொதுமக்களின் உரிமையை நிலைநாட்ட மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்ததுடன், பொது மக்கள் பயன்பாட்டிற்கான அரசு நிலங்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. முன்னதாக மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிக்கும் நிகழ்வில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டத் தலைவர் ஆர். குழந்தைவேல், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. கலிய பெருமாள், முன்னணி நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.