தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

2 Feb 2026, 4:51 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சேலம் - கரூர் – திண்டுக்கல் இடையே, இரு வழி ரயில் பாதையாக மாற்ற

நடவடிக்கை சேலம், பிப்.2- சேலம் - கரூர் - திண்டுக்கல் இடையே இரு வழிப்பாதை யாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் பன்னாலால் பேட்டியளித்துள்ளார். ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து ஒன்றிய ரயில்வே துறை  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியிலிருந்து திங்க ளன்று காணொலி மூலம் விளக்கினார். இதுகுறித்து சேலம்  ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால் செய்தியாளர்களி டம் பேசுகையில், பயணிகள் சேவை மூலம் நடப்பாண்டில் சேலம் கோட்டம் ரூ.612.58 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது  முந்தைய ஆண்டைவிட 5.6 சதவீதம் அதிகமாகும். அதே  நேரத்தில், சரக்கு வருவாய் ரூ.244.26 கோடியாக உள்ளது.  இது 10.03 சதவீதம் அதிகமாகும். நடப்பாண்டு 304 சிறப்பு ரயில்களின் இயக்கம் மூலம் ரூ.41.74 கோடி வருவாய் கிடைத் துள்ளது. துல்லியமான நேரம் கடைபிடித்தலில் 94.4 சத வீதத்தை சேலம் கோட்டம் பதிவு செய்துள்ளது. இதுதவிர, ஈரோடு - ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் உட் பட சேலம் கோட்டத்தில், 3 புதிய ரயில் சேவைகள் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளன. சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள் ளிட்ட 15 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ்  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சேலம் -  திண்டுக்கல் மார்க்கத்தில் இருவழிப் பாதையாக மாற்ற நட வடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கு: மகிளா நீதிமன்றத்தில் விசாரணை

துவக்கம் கோவை, பிப்.2- கோவையில் கல்லூரி மாணவி கும்பல் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணை, மகிளா நீதி மன்றத்தில் துவங்கியது. கோவை விமான நிலையம் அருகே கடந்தாண்டு நவ.2  ஆம் தேதியன்று கல்லூரி மாணவியை மூன்று பேர் கொண்ட  கும்பல் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்ப வம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக  பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கில் தொடர் புடைய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், கார்த்திக்,  தவசி ஆகிய மூவரை காவல் துறையினர்  சுட்டுப் பிடித்தனர்.  இந்த வழக்கு விசாரணை கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. அப்போது கைது செய்யப்பட்ட  மூன்று பேரிடமும் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு, 50  பக்க குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு  விசாரணை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் இருந்து மகிளா நீதி மன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த  ஜன.9 ஆம் தேதி சுமார் 220 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்  செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசா ரணை திங்களன்று பொறுப்பு நீதிபதி சுந்தரராஜன் முன்னிலை யில் துவங்கியது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜிஷா ஆஜரா னார். இந்த வழக்கில் வாய்தாவிற்கு செல்லாமல் அடுத்த டுத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல், சாட்சி விசாரணை என விசா ரணை தீவிரமாக நடைபெற துவங்கியுள்ளது. மேலும், மூடிய  அறையில் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி  மற்றும் அவரது நண்பரிடம் தனித்தனியாக விசாரணை நடை பெற்றது. மேலும், விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேந் நிறுத்தப்பட்ட சதீஷ், கார்த்திக், தவசி ஆகியோரிடமும் விசா ரணை நடைபெற்றது.

மகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை

கோவை, பிப்.2- மேட்டுப்பாளையம் சாலை, பிரஸ் காலனி அருகே  மகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. கோவை - மேட்டுப்பாளையம் சாலை, பிரஸ் காலனி அருகே உள்ள தம்பு நகரை சேர்ந்தவர் கம லேஷ் (48). கதிர் நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக பணி யாற்றி வந்தார். இவரது மனைவி இலக்கியா (45).  இவர்களது மகள் எக்சிதா ஏஞ்சேல் (10). இதனி டையே, இலக்கியா நீண்ட நாட்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோய் குணமாகாததால் தம்பதியினர் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளனர். இந்நிலை யில், ஞாயிறன்று இரவு தனது மகளுக்கு விஷம்  கொடுத்துவிட்டு, கமலேஷ் மற்றும் இலக்கியா ஆகிய  இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட னர். தொடர்ந்து, திங்களன்று காலை தகவலறிந்து  வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், மூவ ரின் சடலங்களையும் மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.

கல்குவாரியில் தவறி விழுந்து ஜார்கண்ட் தொழிலாளி பலி

திருப்பூர், பிப்.2- பல்லடம் அருகே கல்குவாரியில்  தவறி விழுந்து ஜார்கண்ட் மாநில  தொழிலாளி பரிதாபமாக உயிரிழந் தார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட் டம், கோடங்கிபாளையத்தில் செயல் பட்டு வரும் ஏ.ஜி.எம் கல்குவாரியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிர்சா முண்டா (28) பணிபுரிந்து வந் தார். இவர் திங்களன்று பணியில் ஈடு பட்டிருந்த போது 20 அடி உயரத்தில்  இருந்து தவறி விழுந்து படுகாயம டைந்தார். இதையடுத்து அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு கோவை தனி யார் மருத்துவமனைக்கு அழைத்து  சென்ற நிலையில், செல்லும் வழி யிலே உயிரிழந்தார். இதுகுறித்து பல் லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிர்சா முண்டா விபத்தில் உயிரிழந்த தக வல் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள  அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கி ருந்து புறப்பட்டு வந்து கொண்டிருப் பதாக காவல் துறையினர் தெரிவித்த னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.