தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2 சாயப்பட்டறைகள் இடிப்பு

1 Nov 2026, 1:25 am
2 சாயப்பட்டறைகள் இடிப்பு

2 சாயப்பட்டறைகள் இடிப்பு

சேலம், அக்.31-ஆழ்துளை கிணற்றிலிருந்து ரோஸ் கலரில் சாயக்கழிவுநீர் கலந்து வந்ததையடுத்து, அனுமதியின்றி செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகளை அதிகாரிகள்இடித்து அப்புறப்படுத்தியதோடு மின்சார இணைப்பையும் துண்டித்தனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட 22 ஆவது வார்டு தாவாந்தெரு பகுதியில் வசித்துவரும் பிரவீன் மற்றும் கண்ணன் ஆகியோரின் குடியிருப்பு வீடுகளில் இருக்கும் ஆழ்துளை கிணற்றிலிருந்து கடந்த ஒரு வார காலமாக ரோஸ் கலரில்துர்நாற்றத்துடன் கூடிய சாயக்கழிவு நீர் வருவதாகஅப்பகுதி பொதுமக்களிடையே எழுந்த குற்றச்சாட்டு, ஊடகங்களில் வெளியானது. இதனையடுத்து அந்த பகுதியில் சட்ட விரோதமாக அரசுஅனுமதியின்றி குடியிருப்பு நகர பகுதியிலேயே சாயப்பட்டறைகள் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் மற்றும் வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் சனியன்று தாவாந்தெரு பகுதியில் சண்முகசுந்தரம் மற்றும் ஆறுமுகம் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு சாயப்பட்டறைகளையும் இடித்து அப்புறப்படுத்தி மின்சார இணைப்பையும் துண்டித்தனர்.

மேலும், இரவு நேரத்தில் சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருவதாகவும் அதன் கழிவு நீரை சுத்திகரிக்காமல் அப்படியே நிலத்திற்குள் இறக்கியதாலும் நிலத்தடி நீர் மாசடைந்து விட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்த குடியிருப்பு வாசிகள் தற்போதுசாயப்பட்டறைகளை இடித்து அப்புறப்படுத்தியதால் நிம்மதி அடைந்தனர். இதுபோன்ற நகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து இதுபோன்ற அனுமதியில்லாமல் குடியிருப்புபகுதியிலேயே சாயப்பட்டறைகள் நடத்தி வருவதை தடுத்து நிறுத்தி துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் விவசாய நிலங்களிலுள்ள நிலத்தடி நீர் மாசடைந்து சலவை பட்டறை கழிவுநீராகவே வெளிவந்ததை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நான்கு சாயப்பட்டறைகளை இடித்து அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.