சேலம் அரசு மருத்துவமனையின் நிர்வாகக் குளறுபடியால் அவதியுறும் சர்க்கரை நோயாளிகள்
12 Jun 2026, 10:29 pm

சேலம் அரசு மருத்துவமனையின் நிர்வாகக் குளறுபடியால் அவதியுறும் சர்க்கரை நோயாளிகள்

சேலம் பழைய பேருந்து நிலைய பிர தான சாலையில் அமைந்துள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் மருத்துவப் புகலிடமாக விளங்கி வருகிறது.

நாள்தோறும் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு, சேலம் மட்டுமன்றி நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக் குறிச்சி ஆகிய அண்டை மாவட்டங்களிலி ருந்தும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக தினசரி வந்து செல் கின்றனர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இம் மருத்துவமனையில், சமீபகாலமாக சர்க் கரை நோயாளிகள் பிரிவு கடும் நிர்வாகக் குளறு படிகளால் முடங்கிப் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறை எண் 40 இல் சர்க்கரை நோய் பிரிவு செயல் பட்டு வருகிறது.

இங்கு வரும் முதியவர்க ளும், சர்க்கரை நோயின் தீவிரத்தால் பாதிக் கப்பட்டவர்களும் போதிய மருத்துவர்கள் மற் றும் ஊழியர்கள் இல்லாத காரணத்தால் மணி கணக்கில் அலைக்கழிக்கப்பட்டு, மன உளைச் சலுக்குள்ளாகி வருகின்றனர். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த மாதிரி எடுப்பதில் நில வும் காலதாமதம் அவர்களின் உடல்நிலையை கடுமையாக பாதிப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் உணவுக்கு முன்பு ரத்தப் பரி சோதனை செய்ய காலை 7 மணிக்கே வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊழியர்களின் தாமதத்தால் காலை 9:30 மணிக்கு மேல்தான் ரத்த மாதிரியே எடுக்கப்படுகிறது. இதனால், மாத்திரைகளை உட்கொள்ளவும், காலை உணவு சாப்பிட வும் முதியவர்கள் காலை 10 மணி வரை காத் திருக்க வேண்டியுள்ளது.

அதன் பின்னர், ’சாப் பிட்ட பின்’ எடுக்கப்படும் ரத்த பரிசோ தனைக்காக மீண்டும் காலை 11 மணி வரை பசி யோடும், தாகத்தோடும் காத்திருக்க வேண் டிய அவல நிலை நீடிக்கிறது. சர்க்கரை நோய் பிரிவுக்கு வரும் ஒரு நோயாளி, மருத்துவமனையை விட்டு வெளியேறுவதற்குள் பல அடுக்கு வரிசை களில் நின்று தங்க ளது மொத்த ஆற் றலையும் இழக்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனைக்கு வந்த சர்க்கரை நோயாளி ஒருவர் கூறுகையில், நூற் றுக்கணக்கான ரூபாய் தனியார் மருத் துவமனைக்கு கொடுக்கும் வசதி வாய்ப்பு இல்லாததால்தான் இங்கு வருகிறோம். அரசு மருத்துவமனை என்றால் கூட்டம் அதிக மாகத்தான் இருக்கும் என்பதை நாங்களும் புரிந்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அது மருத்துவமனை நிர்வாகத்தின் குளறு படியால் நிகழ்கிறது என்பதால்தான் கோபம் வருகிறது. முதலில், வெளிநோயாளிகளுக்கான முதல் பதிவு சீட்டை பெற வரிசையில் நிற்க வேண்டும்.

பின்னர், சர்க்கரை நோய் மருத்து வரை சந்திக்க பதிவு செய்ய வரிசை, இதனை யடுத்து, ரத்த அழுத்தம் பரிசோதனை, ரத்த மாதிரி பரிசோதனை பதிவு, மாத்திரைகள் வாங்க பதிவு செய்ய வரிசை, மருந்தகத்தில் மருந்துகளை பெற வரிசை என வரிசையில் நிற்க வேண்டிய பட்டியலே நீள்கிறது.

ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி இடங் களில் வரிசையில் நிற்க வைப்பதால், நோயாளி கள் தங்களின் ஒட்டுமொத்த நேரத்தையும் மருத்துவமனையிலேயே கழிக்க வேண்டியுள் ளது என்றார். இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகையில், உண்மையில் சர்க்கரை நோயா ளிகளை அலைக்கழிப்பது வேதனையை ஏற் படுத்துகிறது

. இந்த ’மல்டிபிள் கவுண்டர்’ முறையை ஒழித்து, ஒரே இடத்தில் அனைத் துப் பதிவுகளையும் மேற்கொள்ளும் ’ஒற்றைச் சாளர முறை’ அமல்படுத்தப்பட வேண்டும். மேலும், சர்க்கரை நோயாளிகளின் வருகை எண்ணிக்கைக்கு ஏற்ப இங்கு போதிய மருத்து வர்கள், அலுவலக உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், கணினி உதவியாளர்கள் மற்றும் நிரந்தர செவிலியர்கள் பணியமர்த் தப்படவில்லை.

மருத்துவமனையின் பெரும் பாலான பணிகளை செவிலியர் கல்லூரி மாணவ-மாணவிகளே மேற்கொண்டு வரு கின்றனர். அவர்கள் பயிற்சிப் பணியில் இருப்ப தால், அவசர தேவைகளின் போது நோயாளி களுக்கு முறையான, விரைவான மருத்துவ உதவிகள் கிடைப்பதில் பெரும் தாமதம் ஏற்படு கிறது.

இம்மருத்துவமனையின் பழமை வாய்ந்த ரத்த வங்கி காலை 7 மணிக்கே திறக்கப்ப டும் என்று அறிவிப்புப் பலகையில் எழுதப்பட் டுள்ளது. ஆனால், நடைமுறையில் காலை 8 மணி வரை ரத்த வங்கி திறக்கப்படுவதில்லை. இதனால், சர்க்கரை நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ரத்தம் மற்றும் பரிசோதனைச் சேவைகளை வழங்க முடியாமல் போவதோடு, அவர்களின் மன அழுத்தமும் சர்க்கரை அள வும் மேலும் அதிகரிக்க வழிவகுக்கிறது.

ஏழை எளிய மக்களின் உயிர்காக்கும் அர ணாக விளங்கும் சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், இனியாவது தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் துறையை முறையாகக் கண்காணித்து, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.

நோயாளிகளின் அலைக்கழிப்பை தடுக்க டிஜிட்டல் முறையிலான ஒருங்கி ணைந்த எளிய பதிவு முறையை உடனடி யாக செயல்படுத்தி, ஏழை மக்களின் துயர் துடைக்க மாவட்ட நிர்வாகமும், மருத்துவ மனை முதல்வரும் போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசு மருத்துவமனையின் இந்த அவ லத்தை கண்டித்து அண்மையில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத் தியது குறிப்பிடத்தக்கது. - எழில்