தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சம்பளம் வழங்கக் கோரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்புப்போராட்டம்

21 Jun 2026, 2:21 am
சம்பளம் வழங்கக் கோரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்புப்போராட்டம்
<p><strong>சம்பளம் வழங்கக் கோரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்புப்போராட்டம்</strong></p><p>சேலம், ஜூன் 20- சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பளம் வழங்கக் கோரி பணிகளை புறக்கணித்து காத்திருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள், காவலர் கள், சமையல் பணியாளர்கள், எலக்ட்ரீசியன்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உள் ளிட்ட பல்வேறு பணிகளை கிரிஸ்டல் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. ஒப்பந்தம் அம லுக்கு வந்து ஒன்றரை மாதங்கள் கடந்தும் தொழிலாளர் களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், மாதாந்திர சம்பள கணக்கு சீட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் சனியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாத தால் போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தின் போது தூய்மைப் பணியாளர்களான சிவ காமி மற்றும் மஞ்சுளா ஆகியோர் மயங்கி விழுந்தனர். அவர் கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சங்க நிர்வாகி சி. கருப்பண்ணை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.