அரசு மருத்துவமனை முன்பு தனியார் ஆம்புலன்ஸ்கள் நிறுத்த தடை
13 Jul 2026, 12:16 am
<p><strong>அரசு மருத்துவமனை முன்பு தனியார் ஆம்புலன்ஸ்கள் நிறுத்த தடை</strong></p><p>சேலம், ஜூலை 12- சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் இடைத்தரகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள் ளது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அதிகளவில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங் கள் நிறுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை இடைத் தரகர்கள் மூலம் தனியார் மருத்துவமனைக ளுக்கு அழைத்துச் செல்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மருத்துவமனை நுழைவாயிலில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, நோயாளிகள் மற்றும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைகள் தடையின்றி இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகளை தனியார் மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்லும் இடைத் தரகர்களை கட்டுப்படுத்தவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் மருத்துவ மனைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனையில் இருந்து நோயா ளிகளை இடைத்தரகர்கள் மூலம் அழைத் துச் செல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விதிமீற லில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், அரசு மருத்துவமனை வளாகத் திற்குள் எந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகன மும் நுழையக் கூடாது என்றும், குறிப்பாக தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.</p>
