டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டம்
4 Aug 2026, 11:28 pm

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டம்

சேலம், ஆக.4-கெங்கவல்லி அருகே செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், கெங்கவல்லி சிவன் கோவில் அருகே தம்மம்பட்டி செல்லும் பிரதான சாலையில் அரசுடாஸ்மாக் கடை எண் 7424 செயல்பட்டுவருகிறது. இப்பகுதியைச் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

மேலும், பல்வேறு கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாகஇருப்பதால் பெண்கள், பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும்அதிகளவில் இவ்வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக்கடைக்கு வரும் சிலர் சாலையோரங்களில் மது அருந்தி, போதையில் பெண்கள் மற்றும் மாணவிகளை தொந்தரவுசெய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருவதாகக்கூறி, டாஸ்மாக் கடையை உடனடியாகஅகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு, கடையை திறக்க விடாமல் செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், பொதுமக்கள் தங்களது கோரிக்கையில் உறுதியாக இருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர், சேலம்டாஸ்மாக் உதவி மேலாளர் சரவணகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஒரு மாத காலத்திற்குள்டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்குமாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுஅமைதியாக கலைந்து சென்றனர்.