மலைவாழ் மக்களின் நிலத்தை வனத்துறை நிலம் எனக் கூறி ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக புகார்
29 Sept 2026, 11:17 pm

மலைவாழ் மக்களின் நிலத்தை வனத்துறை நிலம் எனக் கூறி ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக புகார்

சேலம், செப்.29-வாழப்பாடி அருகே மலைவாழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தை வனத்துறை நிலம் எனக் கூறி மிரட்டி ரூ.15 ஆயிரம் பணம் பெற்றதாக கூறப்படும் வனத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பெரிய குட்டிமடுவு பகுதியில் வசிக்கும் பழனியம்மாள், அவரது கணவர் வெங்கடாசலம் ஆகியோரின்உறவினரான இளங்கோவன் பெயரில் சர்வே எண் 39/1-ல் 1.77 ஏக்கரும், சர்வே எண் 40/2-ல் 2.26 ஏக்கரும் நிலம் உள்ளது. இந்த நிலம் வனத்துறை நிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. நிலத்தில் அதிகளவில் செடிகள் இருந்ததால், அவற்றை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் அகற்றியபோது, வனத்துறை ஊழியர்களான ஃபாரஸ்ட் முனீஸ்வரன், கார்டு ஹேமா ஆகியோர் பணியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறைக்கு கட்டணம் செலுத்தியதைத் தொடர்ந்து, கடந்த 24 ஆம் தேதி நிலம் அளவீடு செய்யப்பட்டது. அப்போது செடிகள் பட்டா நிலத்தை ஒட்டியுள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான தரிசு நிலத்தில் மட்டுமே அகற்றப்பட்டதாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்நிலையில், வனத்துறையினர் சந்தனக்கட்டை வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்புவதாக மிரட்டி, பின்னர் ரூ.15 ஆயிரம்பெற்றுக்கொண்டனர்.மேலும், செப்.28 காலை வனத்துறை ஊழியர்கள் வீட்டுக்கு வந்து இளங்கோவனைவாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது அவரது மகள் சுவாதி மற்றும் பொதுமக்கள் தடுத்துஅவரை மீட்டனர்.எனவே, ஃபாரஸ்ட் முனீஸ்வரன், கார்டு ஹேமா உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும், ரூ.15 ஆயிரத்தை திரும்பப் பெற்றுத்தரவும் பழனியம்மாள், வெங்கடாசலம், இளங்கோவன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.