போலி ஆவணத்தால் 20 ஏக்கர் நிலம் அபகரிப்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி
8 Jun 2026, 11:03 pm

போலி ஆவணத்தால் 20 ஏக்கர் நிலம் அபகரிப்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம், ஜூன் 8- போலி ஆவணங்களின் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி விவசாயி ஒருவர் தனது குடும்பத்துடன் தற் கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டி ஏலத் தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் (53), அவரது மனைவி நிலா (48) மற்றும் உறவினர் சாந்தி (52) இந்த மூவரும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு, திங்களன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக் குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார், அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினர். பாதிக்கப்பட்ட மாணிக்கம் கூறுகை யில், எங்களது 20 ஏக்கர் பூர்வீக நிலத்தை, நடுப்பட்டி விஏஓ செல்வகுமார் மற்றும் வட் டாட்சியர் கருணாகரன் ஆகியோர் இணைந்து போலி ஆவணம் தயாரித்து தனியார் கொலுசு பட்டறை உரிமையாள ருக்கு விற்றுவிட்டனர். படிப்பு அறிவில்லாத நாங்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்தனர். காடை யாம்பட்டி போலீசாரும் அதிகாரிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்டு எங்களது புகாரை நிராகரித்துவிட்டனர். தற்போது எங்க ளது வீட்டையும் காலி செய்யச் சொல்லி மிரட்டுவதால், வாழ வழியின்றி தற் கொலைக்கு முயன்றோம் என கண்ணீரு டன் தெரிவித்தார். இதையடுத்து, மூன்று பேரையும் சேலம் டவுன் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.